2025 மே 10, சனிக்கிழமை

பாராட்டினால் சாதனையாளர்களை உருவாக்கலாம்: உதயஸ்ரீதர்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
சாதனை படைப்பவர்களை அவர்களது பிரதேசத்தில் வைத்து பாராட்டுவதன் மூலம் மற்றவர்களும் சாதனையார்களாக மாறவேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
 
தேசிய, மாகாண மட்டங்களில் கலை மற்றும் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடரந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

எமது பிரதேசத்தில் கடந்த ஆண்டும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த சாதனைகளுக்குச் சொந்தமானவர்களை பாராட்ட வேண்டியது எமது கடமையாகும். அந்தவகையில் பிரதேச செயலகத்தின் கலை காலாசார பேரவை மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்தர் இணைந்து கௌரவிக்கும் நிழ்வை ஏற்பாடு செயதுள்ளனர்.
 
சாதனைகள் நிகழ்த்தப்படும் போது அதனைப் பாராட்டுவதன் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கக் கூடியதாகவுள்ளது. சாதனை படைத்தவர்களை அந்த அந்த பிரதேசங்களில் வைத்து பாராட்ட வேண்டும் அப்போது அவர்களுக்கு மக்கள் மத்தியல் கௌரவம் கிடைக்கும்.
 
எமது பிரதேசத்திலே கலையை வளர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய பா.கமலநாதன் அவர்களுக்கு கலாபூசனம் விருது கிடைத்துள்ளமை எமது பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
 
2015இல் நடைபெற்ற தேசிய மற்றும் மாகாண விளையாட்டு விழாக்களில் எமது பிரதேச விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டிள்ளனர். கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட வெற்றிகளை விட இந்த வருடம் அதிக பதக்கங்களைப் பெற்று எமது பிரதேசத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
 
கடந்த வருடம் எல்லே பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற செங்கலடி மஞ்சள்தாரகை விளையாட்டுக் கழகத்தினர் இந்த வருடம் தங்கப்பதக்கம் பெறவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X