Kogilavani / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் மூடப்பட்டிருந்த பூர்;வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக திங்கட்கிழமை(14) மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பூர்;வீக நூதனசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்;மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்;வீக நூதனசாலையில் சில உருவபொம்மைகள்(உருவச்சிலைகள்) வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை அகற்றுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை விடுத்திருந்தது. இதனடிப்படையில் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் இந்த நூதனசாலை மூடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) தற்போது அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர், மீண்டும் இந்த நூதனசாலை மக்கள் பார்;வைக்காக திங்கட்கிழமை (14) திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூதனசாலை காலை 10 மணி முதல் மாலை ஆறுமணி வரை மக்கள் பார்;வைக்காக திறந்திருக்கும் என அதன் அதிகாரி மேலும் தெரிவித்தார்.



3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025