2025 மே 08, வியாழக்கிழமை

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், பா.கிருஷ்ணா

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி என்.என்.அப்துல்லாஹ்  இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பூ.பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X