Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 07 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'ஞாயிறு தினம் அறநெறி கற்பித்தலுக்கான தினம் என அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்டப்போதிலும் அது முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை' என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம் தெரிவித்தார்.
திருவள்ளுவர் குரு பூஜையும் திருக்குறள் மனனப்போட்டியும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றக் கட்டடத்தில் நேற்;று (06) நடைபெற்றபோதே அவர் இதனை கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களை நல்வழிப்படுத்துவது அறநெறியே. அத்தினங்களில் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுவதால் அறநெறி வகுப்புக்களுக்கு பெற்றோர்; தங்களது குழந்தைகளை குறைவாகவே அனுப்புகின்றனர்;. எனவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.அதற்குறிய சட்ட நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வுகளில் மன்றத்தின் உபதலைவர் எம்.காளிதாசன் மற்றும் அதிபர் க.கிருஸ்ணபிள்ளை, பொருளாளர் க.சிவசிதம்பரம், அறநெறி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விசேட குரு பூஜையுடன் ஆரம்பமான நிகழ்வில் திருவள்ளுவரின் சிறப்புக்கள் பற்றிய சொற்பொழிவுகளும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. இறுதியாக திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago