Suganthini Ratnam / 2016 ஜூலை 07 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சுமார் 2,500 இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இப்பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிக்குமாறு அப்பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் பு.தவராச, இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்;.
இந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தங்களின் கற்றலை பூர்த்தி செய்துவிட்டு, வேலை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு இவர்களுக்கு தகுந்த வேலையோ, உரிய சம்பளமோ கிடைப்பதில்லை.
நகர்ப்புறங்களை அண்டி தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால், தமது பிரதேசத்தில் இதுவரையில் தொழிற்பேட்டைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இங்கு தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
தனியார் அமைப்புகளோ அல்லது வேறு யாராவது இப்பிரதேசத்தில் தொழிற்பேட்டைகளை ஆரம்பித்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வரும் பட்சத்தில் அதற்குரிய ஒத்துழைப்பை வழங்க முடியும் என போரதீவுப்பற்றுப் பிரதே செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago