Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
deeptha / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பிரையாணத் துறையினரை கவர்தெடுக்கும் மட்டக்களப்பின் பாரம்பரிய பொருட்களை உற்பத்தி உட்பட பல்வேறுபட்ட பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு தேசிய தொழில் முயற்சி அதிகார சபை தயாராக உள்ளது என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தெரிவித்தார்.
தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து பிராந்திய வியாபார மன்றம் அமைப்பதற்கான கலந்துரையாடல் டேபா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.
தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பின் விழுமியங்களை வெளிப்படுத்தும் பாடும் மீன்கள், மரபுரிமை மிக்க இடங்களான மட்டக்களப்பு கோட்டை, நகர மணிக்கூட்டுக் கோபுரம், வெளிச்ச வீடு, மட்டக்களப்பு வாவி, கல்லடிப் பாலம் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரையாணிகளைக் கவரக் கூடிய பொருட்களை சுவர்களில் தொங்க விடும் காட்சிப் பொருட்களாக பற்றிக் பிரின்டிங் செய்து சந்தைப் படுத்துவது, பாரம்பரிய உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்து விற்பளை செய்து விற்பனை செய்வது, கடல் மற்றும் தெங்கு சார் மூலப்பொருட்களை கொண்டு அழகான பாவனைப் பொருட்கள் மற்றும் அழகுசார் பொருட்கள் உட்பட பல்வேறு பட்ட பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துவது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவது மட்டுமல்லாமல் மட்டக்களப்பின் மரபையும் வெளிப்படுத்துவதற்கான களமாக இத்தகைய சந்தை வாய்ப்புக்கள் அமையும்.
ஏனைய மாவட்டங்களில் இத்தகைய மன்றங்கள் அமைத்து செயல்படுவது போல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த மன்றம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன குறித்த தொழில் முயற்சியாளர்களின் தொழில் வாண்மையை விருத்தி செய்வதற்கு அனைலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொழில் முயற்சியாளாகள், சமுர்த்தி முகாமையாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் வரி மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago
1 hours ago