2025 மே 07, புதன்கிழமை

புற்றுநோய் வைத்தியசாலை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின திறந்து வைத்தார்.

250 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலையில்  ஒரேநேரத்தில் 72 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதி, வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி,  மாதாந்த கிளினிக் நடத்துவதற்கான வசதி ஆகிவை  செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

இதேவேளை,  67 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான நிர்வாகக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டதுடன், இவ்வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டட நிர்மாணத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X