Princiya Dixci / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'அச்சுறுத்துப் புற்றுநோயும் அவற்றைத் தவிர்ந்துக் கொள்ளும் வழிமுறைகளும்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பிரசாரம், ஏறாவூர் மர்க்கசுல் இஸ்லாமி பள்ளிவாசலில் நாளை 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
நாளைய தினம் இரவு 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர் ஏ.இக்பால் கலந்துகொண்டு புற்றுநோயின் விபரீதங்கள் பற்றி பொதுமக்களைத் தெளிவூட்டவுள்ளார்.
புற்றுநோயின் ஆரம்ப நிலை, அறிகுறிகள், சிகிச்சை முறை, புற்றுநோயின் ஆபத்தான கட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய தெளிவூட்டல்கள் இதன்போது இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago