Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கல்லடிப் பிரதேசத்தில் போலியான முறையில் நுழைவுச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு பெருமளவில் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, சனிக்கிழமை (02) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (07) மாலை இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறி கொழும்பிலுள்ள பிரபல இசைக்குழு ஒன்றின் பெயரில் போலியான முறையில் நுழைவுச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு பெருமளவில் பணம் சம்பாதித்து வந்த இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை (06) மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.
கல்முனை, வாழைச்சேனை உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் 100 ரூபாய் மற்றும் 250 ரூபாய் பெறுமதியான நுழைவுச்சீட்டுகளை சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்கு இந்தச் சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 187 நுழைவுச்சீட்டுப்; புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் மட்டக்களப்பையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago