2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான இரு பொலிஸாருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 25ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.  

இந்தச் சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை வீடு ஒன்றுக்கு பணியாளர் தேவையெனக் கூறி முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு கடந்த 24ஆம்  திகதி இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X