2025 மே 08, வியாழக்கிழமை

போலி லேபல் ஒட்டப்பட்ட தேன் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடி பொதுச் சுகாதாரப் பிரிவில் போலி லேபல் ஒட்டப்பட்ட 07 தேன் போத்தல்களையும் சுமார் 15 கிழங்கு சீவல் பக்கெட்டுகளையும் மற்றும் மருத்துவச் சான்றிதழின்றியும் அனுமதி பெறப்படாதும் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்த  நடமாடும் உணவு வாகனமொன்றையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கல்லடிப் பகுதியில் புதன்கிழமை (16) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, இவை கைப்பற்றப்பட்டதாக கல்லடிப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் க.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இவற்றை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழங்கு சீவல் விற்பனையாளர் இதன்போது தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X