2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பொலிஸாரின் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்து; இளைஞன் காயம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்த பொலிஸாரின் வாகனமும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை -மட்டக்களப்புப் பிரதான நெடுஞ்சாலையில் கல்லடிப் பாலத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அமிர்தலிங்கம் தினேஸ்கரன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த வீதியில் மஞ்சள் கோட்டின் ஊடாகப் பாதசாரி ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர் பாதசாரி வீதியைக் கடப்பதற்காக வழிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அவ்வேளையில், வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸாரின் வாகனம் குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளுடன்; மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X