2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புளியடிக்குடாவில் சிரமதானம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் அறிவுறுத்தலுக்கிணங்க சுற்றாடலை துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு புளியடிக்குடா சென் செபஸ்தியான் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு சர்வமத ஒன்றியத்தின் அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை,கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் சுற்றாடலை பரிசோதிக்கும் நிகழ்வு பொது சுகாதாரப் பரிசோதகர் வி.சி. சகாதேவன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

தாமரைக்கேணி, சின்ன உப்போடை, அரசடி, வேதாரணியம் சதுக்கம் ஆகிய இடங்களில் 237 வதிவிடங்களின் களிவறைகள், சுற்றாடல், கைவிப்பட்ட பிரதேசங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது, டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த 7 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் 27 பேருக்கு அறிவுறுத்தல் கடிதமும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X