2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘பசுமையான சூழலை நோக்கி’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 நவம்பர் 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பசுமையான ஒரு சூழலை உருவாக்கி, இயற்கைச் சமனிலைப் பேணும் ஒரு செயற்பாடாக, எதிர்கால சிந்தனை அமைப்பால் வாகரைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 பாடசாலைகளில் மரக்கன்றுகள் நடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வாகரை கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் இன்று (08)  மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்; மாணவர்களுக்கு மரக்கன்று நடுகையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வாகரை மகா வித்தியாலயம், பால்சேனை அ.த.க.பாடசாலை, கதிரவெளி விக்ணேஸ்வரா வித்தியாலயம், வம்மிவட்டவான் வித்தியாலயம், பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், மாங்கேணி றோ.க.த.க.பாடசாலை, காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயம், வட்டவான் கலைமகள் வித்தியாலயம், கண்டலடி அருந்ததி வித்தியாலயம், இறாலோடை வள்ளுவர் வித்தியாலயம்  ஆகிய பாடசாலைகளில், இவ்வாறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

எதிர்கால சிந்தனை அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை பொறுப்பாளர் ச.கஜேந்தன், உறுப்பினர் எஸ்.ஜீவிதன் ஆகியோர் இணைந்து, கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற்று, குறித்த பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளை எடுத்துச் சென்று, சிறப்பாக இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக மலையப் பகுதிகளில் இயற்கை அழிவுகள் இடம்பெற்று வருகின்றன. மண்சரிவு, கடலரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு, இயற்கை சுவாச வாயு குறைதல், மண் வளம் குன்றுதல் போன்ற  பாதிப்புக்களினால் மக்களின் எதிர்கால அன்றாட வாழ்வியல் கேள்விக்குறியாகியுள்ளது. மனித செயற்பாட்டினால் வனவளம் அழிவடைந்து போவதே இதற்கு முக்கிய காரணமாகும் 

இவ்வாறான பாதிப்புக்களை குறைத்து, பாடசாலை மாணவரிடையே மரக்கன்று நடுகை தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் ஊடாக, எதிர்கால சமுதாயத்தினரும் மரநடுகையின் முக்கியத்துவத்தினை அறிந்துகொண்டு, மர நடுகையில்; ஈடுபடுவதன் ஊடாக இலங்கை திருநாட்டில் பசுமையான ஒரு சூழலை உருவாக்குவதில் பங்குதாரராக தம்மை அர்ப்பனித்துக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X