Kogilavani / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
'பெண்கள் உரிமை', 'குடும்ப வன்முறை' மற்றும் 'அடிப்படைச் சட்டங்கள்' பற்றிய விழிப்புணர்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மேற்கொள்வதாக காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் தலைவி திருமதி யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.
சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை நினைவுகூறும் முகமாக பால்நிலை வன்முறைக்கெதிராக செயல்படுவோம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'இலங்கையில் 60 வீதமான பெண்கள், வீடுகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உடல்,உள ரீதியான துஷ்பிரயோகம், நிதி மற்றும் நடமாட்டம் தொடர்பான கட்டுப்பாடுகள் போன்ற வன்முறைகளினால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் மூலம் தெரிகின்றன.
1998 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி சர்வதேச பெண்களுக்கான வன்முறைகள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூர்ந்து முதல் முறையாக இங்கிலாந்தில் வெள்ளைப் பட்டி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
எமது நாட்டிலும் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் பெண்,ஆண் எனும் ஏற்றத்தாழ்வு தொடர்பாகவுள்ள வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் ணெ;களுக்கெதிரான வன்முறையை எதிர்க்கும் ஆண்களை இணைத்துக் கொள்வதற்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமு' என்றார்.
'வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தக்க ஆலோசனை சேவைகளை மட்டக்களப்பு நகரில் பன்சலை வீதி மனித உரிமைகள் இல்லம், போதனா வைத்தியசாலை, காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையம் மற்றும் சின்ன உப்போடை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் பெற முடியும்' எனவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago