2025 மே 08, வியாழக்கிழமை

பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுநர்களுக்கு, நேற்று (24) பயிற்சிப் பட்டறையொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில்,  மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில், இப்பயிற்சி நடைபெற்றது.

நியமனத்தைப் பெற்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்த 132 பட்டதாரிகளுக்கு, பட்டதாரி பயிலுநர்களுக்கான திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்காக, மாவட்டத்தின் அனுபவமிக்க சிரேஸ்ட நிர்வாக சேவையாளர்களும் இலங்கை கணக்காளர் சேவையில் சிரேஸ்ட நிலை அதிகாரிகளும் இணைந்து, இப்பயிற்சி நெறியை வழங்கினர்.

பட்டதாரி பயிலுநர்கள் தங்களின் ஆளுமை விருத்தியைப் பெறுவது மாத்திரமல்லாது, மொழி அறிவைப் பெற்று, உயர் நிலைக்கு வர தங்களின் தனிப்பட்ட முயற்சியை எடுக்க வேண்டும் எனவும் நிரந்தர நியமனத்தின் பின்னர் தடை தாண்டல் பரீட்சைகளையும் எதிர்கொள்ளவதற்கான பயிற்சிகளை எடுக்க வேண்டுமெனவும்,  மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக, மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், காணிக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர்  காணி நவரூபரஞ்சனி முகுந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X