Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் கருத்துத் தெரிவிக்கவில்லையென, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (13) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என வேலையற்ற பட்டதாரிகளால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான சாதகமான உறுதிமொழிகளை ஆதரிப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், பட்டதாரிகள் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சாதாரணதரம், உயர்தரம் படித்தவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன எனவும் வேலையற்ற பட்டதாரிகள் உளவியல் ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த நாட்டில், எந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தாலும் வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர் என்றார்.
மேலும், பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் சில அமைச்சர்களும் முட்டுக்கட்டையாக இருப்பதான தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இவ்வாறானவர்கள், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது இதன் எதிர்வினைகளை அனுபவிக்கும் நிலையேற்படுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago