2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘பட்டதாரிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்’

Editorial   / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

“வேலையில்லா பட்டதாரிகள், மீண்டும் வீதிக்கு இறங்காமல் பாதுகாத்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் கிடைக்கப் பெறவேண்டும். மிகவும் கஸ்டங்களை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்ற வாழ்வதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி கொண்டிருக்கின்ற பட்டதாரிகளை ஒரு போதும் அரசாங்கம் கை விடக் கூடாது” எனவும் அவர் தெரித்தார்.

அத்துடன், “கல்வி சார் நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணத்துக்கென அதிகளவான ஆசிரியர் நியமனங்களை வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்துக்கு அதிகளவான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை திறைசேரிக்கு நாங்கள் கூறியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தொண்டர் ஆசிரியர்களையும் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.  கிழக்கு மாகாண சபையில் மக்கள் பிரதி நிதிகள் இல்லா விட்டாலும் கூட கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பாக கடமையாற்றி வருகின்றார். அவரின் இவ்வாறான சிறந்த முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .