2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’பட்டினிச் சாவை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

அரசாங்கம், தேர்தலை மய்யப்படுத்தியச் செசயற்பாடுகளை முன்னெடுக்கின்றதேத் தவிர, கொரனா அச்சுறுத்தலால் ஏற்படும் பட்டினிச் சாவை தடுப்பதற்கானத் திட்டங்களை முன்னெடுப்பதாக இல்லை என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தை அமுல்படுத்திவிட்டே, ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மட்டு.ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக, அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்றும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம், பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது, சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சதொச மூலமாக, மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இருந்த சதோசவை டிவிட்டனர் என்றும் இருக்கும் சதோசவில், குறைந்த விலையில் பொருள்;களைக் கொள்வனவு செய்ய முடியாதயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். 

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.
தேர்தலை மய்யப்படுத்தியே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக தொழிலை இழந்த மக்களுக்கான மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை என்றும் சாடினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X