Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 02 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
தொல்பொருள் மரபுரிமை, பழந்தமிழ் பண்பாட்டுப் பிரதேசமாக மட்டக்களப்பு அங்கிகரிக்கப்பட வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை, ஈஸ்வரா கலைகலா மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்று (01) இரவு நடத்தப்பட்ட படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
நடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மனிதன் இயந்திரத்தோடு பேசுகின்ற நிலையைதான் 21ஆம் நூற்றாண்டிலே பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால், மனிதர்கள் மனிதர்களோடு பேசவேண்டும். மனித விழுமியப் பண்புகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, தராள மனப்பாங்குபோன்ற நல்ல விழுமியப்பண்புகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதனை கலைகளின் ஊடாக ஒன்றுசேர்தலில் மூலம் வளர்த்தெடுக்க முடியும்.
“மட்டக்களப்புக்கே உரியதான பல பாரம்பரிய அம்சங்களைக் குழிதோன்றிப் புதைத்துள்ளோம். அல்லது ஏதோ ஒரு விதத்தில் மறந்துகொண்டு வருகின்றோம்.
“செந்தமிழ்சொல்வளம், கண்ணகி வழக்குரை, கண்ணகி சடங்கு, கொம்பு விளையாட்டு, நாட்டுக்கூத்து, வசந்தன் ஆடல், பாரம்பரிய வைத்தியம் என மட்டக்களப்பு மண்ணுக்கே உரித்தான தனித்துவமான அம்சங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
“ஆனால், அவற்றை வெளிக்கொணராமல் மறைத்து, புதைத்துக்கொண்டு வருகின்றோம். அவ்வேர்களைத் தேடி கலைமன்றங்களுடாக கொண்டு வந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.
“இன்னொருவரினது பண்பாட்டை, கலாசாரவிழுமியத்தை, நாங்கள் எங்கெளுக்குரியதென்று கூறுவது ஒருவகையில் அடிமைத்தனமான செயற்பாடாக பார்க்கின்றேன்.
“மட்டக்களப்பு தமிழர்களுக்கு, மண்ணுக்கென்று உரித்தான தனித்துவமான அம்சங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். தொல்பொருள் மரபுரிமைபிரதேசமாக, பழந்தமிழ் பண்பாட்டு பிரதேசமாக மட்டக்களப்பு அங்கிகரிக்கப்பட வேண்டும். அதற்குரிய வேலைத்திட்டங்களை அனைவரும் இணைந்துமேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
17 May 2025