2025 மே 16, வெள்ளிக்கிழமை

பதிலீட்டு தொழிலாளர்கள் 57 பேருக்கு நியமனங்கள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையால், சுகாதாரப் பதிலீட்டு தொழிலாளர்கள், காவலாலிகள், சாரதிகள் என 57 பேருக்கு தற்காலிக நியமனங்கள், இன்று (12) வழங்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில், நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், எம்.ஐ.ஜவாஹிர், ஏ.எல்.பௌமி, எம்.ஜாபீர், ஏ.எம்.அமீர் அலி திருமதி சல்மா ஹம்சா நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் உட்பட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள சுகாதார பதிலீட்டுத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபையின் ஆளணிக்கேற்ப நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார தொழிலாளியொருவர், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டாரென நிரூபிக்கப்பட்டால் அவர் தொழிலில் இருந்து முற்றாக நிறுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய காத்தான்குடி நகர சபை தவிசாளர் தெரிவிக்கையில்,

“நியமனம் பெறும் சுகாதார பதிலீட்டு தொழிலாளர்கள் தாம் வீடுகளுக்கு கழிவுகளை சேகரிக்கச் செல்லும் போது வீட்டுக்காரர்களுடன் ஒழுக்கமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

“காத்தான்குடி நகர சபை பிரிவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30 திகதியுடன் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு முற்றாக தீர்வை கானும் செயற்பாடுடன் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

“காத்தான்குடி நகர சபை பிரிவை குப்பைகளற்ற ஒரு பசுமையான நகராக மாற்றுவதற்காகவே, சுகாதாரப் பதிலீட்டுத் தொழிலாளர்களையும் நாங்கள் நியமித்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .