2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு

Mayu   / 2024 ஜூன் 06 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகளுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் திகதி 11.06.2024 விசாரணைக்குவருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு   பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கடந்த காலம் ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இந்த புதிய அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .