2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பரராஜசிங்கத்தின் வழக்கு விசாரணை ​ஜுலை 18க்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மீதான வழக்கின் மீதான விசாரணைகள், எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணையின் மற்றுமொரு கட்டம், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். இஸர்டீன் முன்னிலையில் இன்று (14) நடைபெற்றது.

இதன்போது, சந்தேகநபர்களில் ஒருவரான விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டன.

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி, 2005ஆம் ஆண்டு, மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப்மாஸ்டர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம், சட்டமா அதிபர் திணைக்களத்தால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், அது தொடர்பான விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X