2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பற்றைக்காடுகளை அகற்றும் வேலைத்திட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை  நெல்லிக்காடு பகுதியிலுள்ள பற்றைக்காடுகளை அகற்றும் வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாலும் நேற்று நள்ளிரவு யானையின் தாக்குதலால் கணவன், மனைவி இருவர் உயிரிழந்ததை தொடர்ந்தே அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காடுகளை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலகமும் பட்டிப்பளை பிரதேச சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக பட்டிப்பளை பிரதேச சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பற்றைக்காடுகள் அதிகமாக உள்ளமையினாலும், வீதியோரங்கள் மிகுந்த பற்றைகாடுகளாக  காணப்படுவதினாலும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுகள்ளாகுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X