Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சிமன்றங்கள் வளப் பற்றாக்குறையுடன் காணப்படுவதாகவும் இந்த உள்ளூராட்சிமன்றங்களுக்கு வளங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்; அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்புத் திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரசபைப் பிரிவில்; பெரிய தோணா சுத்திகரிப்புப் பணி இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே, அவர் மேற்கொண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச சபைச் செயலாளர்களுக்கு வாகன வசதிகள் கூட இல்லாத பல பிரதேச சபைகள் உள்ளன. அவ்வாறே, பெக்கோ உள்ளிட்ட இயந்திரங்கள் இல்லாத உள்ளூராட்சிமன்றங்களும் உள்ளன.
எதிர்காலத்தில் இந்த மன்றங்களுக்குரிய வளங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.
'மேலும், கிழக்கு மாகாணத்தை சுத்தமாக வைத்திருக்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்,
அந்த வகையில், மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களை ஒன்றுடனொன்று இணைத்து இந்தக் கொத்தணி முறையிலான சுத்திகரிப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்;கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.ராபி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago