2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் பல  நிறைவேற்றப்படுவதில்லை என, கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (10)  நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,'பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படும் வேளைகளில்  கிழக்கு மாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கூட்டங்களை நடத்துகின்றார்.

'இதன் காரணமாகப் பிரதேச சபைச்  செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்குச் சமூகமளிக்காது, முதலமைச்சரால் நடத்தப்படும் கூட்டங்களுக்குச் சமூகமளிக்கின்றனர்.

 'பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பிரதேச அபிவிருத்திகள்  தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆனால், இக்கூட்டங்களில்  பிரதேச சபைச் செயலாளர்கள் இல்லாமல் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய முடியாமல் உள்ளது.
 

எனவே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படும் வேளைகளில் முதலமைச்சர் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X