2025 ஜூலை 19, சனிக்கிழமை

‘பல் சமய உரையாடல் அவசியம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மக்களிடையே பிரிவினை ஏற்படாமல் இருக்க பல் சமய உரையாடல் அவசியம் தேவையாக உள்ளது” என, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட முது நிலை விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.நவரத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“ஒவ்வொரு சமயமும் உரையாடலில் ஈடுபடுவதன் வாயிலாக தமது நம்பிக்கையை அடுத்தவருக்குஅறிவிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பணியானது அடுத்தவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“சமய உரையாடலானது ஒவ்வொரு சமயமும் தம்மையே சுய ஆய்வுக்கு உட்படுத்த வழி சமைத்துக் கொடுக்கின்றது. தம்மிலுள்ள அழுக்குகளை, கறைகளை களைந்து, புதிதாய் பிறக்க உதவுகின்றது.

“சமய நல்லிணக்கம் என்கின்ற போர்வையில் 'எம்மதமும் சம்மதம்' என்கின்ற அபத்தான சித்தாந்த்திலிருந்து முதலில் விடுபட வேண்டும் மாறாக நமது, நாம் பின்பற்றுகின்ற அடிப்படை நம்பிக்கையில் ஊன்றியவர்களாய் அடுத்தவர்களுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட  வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X