2025 மே 08, வியாழக்கிழமை

பழுதான இறைச்சி விற்பனை; உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உணவுப் பொதியில் பழுதடைந்த கோழி இறைச்சியை வைத்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளர் ஒருவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் இன்று புதன்கிழமை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகமொன்றில் செவ்வாய்க்கிழமை (15) பொதுமகன் ஒருவர் மதிய உணவுக்காக வாங்கிய  உணவுப் பொதியில் பழுடைந்த கோழி இறைச்சி காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு அப்பொதுமகன் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த உணவகத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது, குறித்த உணவகத்திலிருந்து பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த உணவகத்தில் பழுதடைந்த உணவுப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற  முறையில்  உடம்பில் காயத்துடன் உணவு பொருட்களை  உணவக ஊழியர் ஒருவர் விற்பனை  செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  குறித்த  உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X