Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பிரிவுக்குட்பட்ட களுதாவளை பொதுச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கிராம் பழுதடைந்த மீன்களைக் கைப்பற்றி அழித்துள்ளதாக களுதாவளைப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.கிருபாகரன் தெரிவித்தார்.
களுதாவளைப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.கிருபாகரன், மற்றும் செட்டிபாளையம், பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் எஸ்.இராஜேஸ்வரன், ஆகியோர் இன்று சனிக்கிழமை களுதாவளைப் பகுதியில் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது உணவு வகைகள், உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் கடைகள், மற்றும், பேக்கரிகள், போன்றவற்றின் சுகாதாரம் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, ஏனைய பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பிலும், ஆராயப்பட்டன.
இந்நிலையில் களுதாவளைப் பொதுச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் பழுதடைந்த மீன்களைக் கைப்பற்றி அழிக்கப்பட்டதோடு, இம்மீன்களை வைத்திருந்த இரண்டு வியாபாரிகளுக்கும், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago