Princiya Dixci / 2017 ஜனவரி 08 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு – செங்கலடி நகரின் மத்தியில் நீண்டகாலமாக இருந்துவந்த பஸ் தரிப்பிடம் உடைக்கப்பட்டமையால் தாம் பல்வேறு சௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகப் பயணிகள் கவலை தெரிவித்தனர்.
செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லும் பஸ் வண்டிகளின் தரிப்பிடமாக பல வருடங்களாக இயங்கிவந்த இக்கட்டடம், வீதி விஸ்தரிப்பு நடவடிக்கையின் நிமித்தம் சில வருடங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டது.
தற்போது வீதி அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்துள்ள போதிலும் கடந்த மூன்று வருடங்களாக பஸ் தரிப்பிடம் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்ஸூக்காகக் காத்திருக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago