Editorial / 2023 நவம்பர் 09 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்
காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு -பொத்துவில் வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி புதன்கிழமை (08) மாலை 7 மணியளவில் நிறுத்தி வைத்துவிட்டு, உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார். வியாழக்கிழமை (09) அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் வண்டி ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago