Janu / 2024 மே 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனையில் இருந்து மாரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்றுவீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(05) நள்ளிரவு 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பொலன்னறுவை டிப்போவுக்கு சொந்தமான குறித்த பஸ் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக மகரகம நோக்கி பயணித்த போது செங்கல சிக்கினல் சந்தியில் வேககட்ப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாக்கியை உடைத்துக் கொண்டு கடை தொகுதிக்குள் உட்புகுந்தது விபத்துக்குள்ளானது
இதில் சாரதி நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மின்பிறப்பாக்கி மற்றும் கடை தொகுதி பலத்த சேதமடைந்ததுடன் அந்த பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது
மேலும் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கனகனராசா சரவணன்


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago