2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் சாரதி காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான

மட்டக்களப்பு _ கல்முனை  பிரதான வீதியில் தாளங்குடா ஆடைத் தொழிற்சாலைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சாரதியொருவர்  காயங்களுக்குள்ளானதாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார்,   பஸ் வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடா ஆடைத் தொழிற்சாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான தனியார் பஸ் வண்டிமீது மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு மீன் ஏற்றி வந்த   பட்டரக  வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில்   பட்டரக  வாகன சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானார்.பஸ் வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்துச் சம்பவத்தினால் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X