2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாடசாலை நேரங்களிலும் தெரு வியாபாரங்களில் சிறுவர்கள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலுள்ள குருக்கள்மடம், கிரான்குளம் போன்ற பகுதிகளில் தெரு வியாபாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியால் செல்கின்ற பாதசாரிகள், பிரயாணிகள், சுற்றுலாப் பயணிகளிடம் நாகப்பழங்கள், ஈச்சம்பழங்கள் விற்பனையில் இச்சிறுவர்கள் ஈடுபடுகின்றனர்.

பாடசாலை நாட்களிலும் பாடசாலை நேரங்களிலும் இவ்வாறு சிறுவர்கள் வீதி ஓரங்களில் நின்று, இந்தப் பழங்களை விற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

வீதியின் ஓரங்களில் நின்று, அவ்வழியால் செல்லும் வாகனங்கள், பிரயாணிகளை மறித்து, தமது வியாபார நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி கற்க வேண்டிய இந்த சிறுவர்கள், வீதியில் நின்று வியாபாரம் செய்வதால் பலரையும் கேள்வி கேட்கச் செய்கின்றது.

சிறுவர்களிடம் இது தொடர்பாக வினவிய போது, “குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வருகின்றோம். இது ஒரு காலத்துக்கான பழங்களாகும். இந்தப் பழங்கள் எல்லாக் காலமும் மட்டக்களப்புக்கு வருவதில்லை” என்றனர்.

சிறுவர்கள், தெருக்களில் நின்று வியாபாரம் செய்வது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர்களின் நலன்களுக்காக வேலை செய்யும் தொண்டர் நிறுவனங்கள் கவனம் செலுத்தி, சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் நிலையை உருவாக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .