Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் நின்ற மிகப் பழமை வாய்ந்த வேப்பை மரம் அடியோடு முறிந்து, பாடசாலைக் கட்டடங்களின் மேல் விழுந்துள்ளது.
அண்மையில் பலத்த மழையுன்கூடிய காற்று விசியமை காரணமாக இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சுமார் இருவாரங்களுக்கு மேலாக, இவ்வாறு பாடசாலைக் கட்டடங்கள் மீது விழுந்து கிடைந்த மரத்தை, இன்று(23) அப்பகுதிக்கு விஜயம் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் நிலமையை அவதானித்து, அம்மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாடசாலைக் கட்டடங்கள் மீது இம்மரம் விழுந்துள்ளதால், பாடசாலைக் கட்டடங்கள் இரண்டு பாதிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago