Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான், ரீ.எல்.ஜவ்பர்கான்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதி பாதசாரி கடவையில் சென்ற பெண்ணொருவர், நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா (வயது 45), பஸ்ஸில் தனது ஊருக்கு செல்வதற்கு பாதசாரி கடவையைக் கடக்கும் போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தகவலுக்கு அமைய, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026