2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - வாகனேரி பகுதியில் அண்மையில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைத் தடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு முன்வந்துள்ளது.

அப்பகுதிக்கு விஜயம் செய்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

வாகனேரி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வால் அப்பகுதி தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றது.

இது தொடர்பில், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறையிட்டபோதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென, பொதுமக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக, சாணக்கியன் உறுதியளித்தார்.

மணல் அகழ்வைத் தடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு, தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உதவுவதற்கும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X