2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு நிவாரணம்

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

தொடர் ஊரடங்கால் தொழில் வாய்ப்பை இழந்த மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு, ஆரையம்பதி பிரதேச செயலக அனுசரணையுடன், ஞானம் அறக்கட்டளையால், நேற்று (31) உலருணவு நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிவாரணப் பொதிகளை, தாளங்குடா, மண்முளை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் பெற்றுக் கொண்டனர்.

ஞானம் அறக்கட்டளை மாவட்டத் திட்ட இணைப்பாளர் ஆர்.சாந்தசீலன் தலைமையில் நடைபெற்ற நிவாரணக் கைளயிப்பு வைபவத்தில், ஆரையம்hமி பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது, சுமார் 1,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் ஒருவருக்கும் வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X