Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் 'பாரம்பரிய அரங்க விழா' எனும் தலைப்பிலான ஆற்றுகைகளும் கண்காட்சியும் நேற்று ஆரம்பமான.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தினையும் பாரம்பரிய கலாசாரத்தினையும் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வுகள் , கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவரும் வேளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்ஆரம்ப முதல்நாள் நிகழ்வு அண்ணாவியார் வேலன் சீனித்தம்பி களரியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றதுடன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சார்பாக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.இராஜேந்திரா கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்,மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கா.சித்திரவேல்,மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்மார்களான தி.விக்ரமன், க.புவனச்சந்திரா, .உ.சுவேந்திரகுமார் மற்று கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆற்றுகைகலைக்கு புத்துயிர் அளித்துவரும் கலைஞர்களான எஸ்.சந்திரசேகரம் அவரது மனைவி விஜயலட்சுமி சந்திரசேகரம்,ஆறுமுகம் இராஜரட்னம் ஆகியோர் மாண்புபெறும் கலைஞர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மாணவர்களின் வசந்தன் கூத்து நடைபெற்றதுடன் பாரம்பரிய கலைப்பொருள்களின் கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago