2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பாரம்பரிய உணவு உற்பத்திக் கண்காட்சி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகரை விவசாய திணைக்களத்தின், விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில், பாரம்பரிய உணவு உற்பத்தி கண்காட்சியும், விழிப்புணர்வும் இன்று (22) வாகரை விவசாய திணைக்களத்தின் சந்தைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப.பேரின்பராசா, வடக்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன் உட்பட திணைக்கள அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாய திணைக்களத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சந்தைக் கட்டடம் வாகரையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இக்கட்டடத்தில் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முகமாகவும், பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் வெளிக்கொணரும் வகையிலும், நஞ்சற்ற உணவை மக்கள் உண்ணும் வகையில் இக்கண்காட்சியும் விழிப்புணர்வும் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .