Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூன் 21 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற விசேட அமர்வில், சபையிலிருந்து பார்வையார்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 9 உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த சம்பவமொன்று, இன்று (21) இடம்பெற்றது.
ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் விசேட அமர்வு, தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது.
பார்வையாளர்கள், சபையின் அமர்வை அலைபேசி மூலம் வீடியோ எடுத்து, அவற்றைப் பேஸ்புக்கில் பதிவிட்டுவதாக, கடந்த காலத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், மீண்டும் மீண்டும் பார்வையாளர்கள் சபை அமர்வு நடவடிக்கைகளை வீடியோ எடுப்பதாகக் குற்றஞ்சாட்டி, பார்வையார்களை வெளியேற்றுமாறு, உறுப்பினர்கள் சிரல் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர், சபையின் அனுமதியின்றி நுழைந்த பார்வையாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். அத்துடன், இனிவரும் காலங்களில், சபை அமர்வுகளுக்குப் பார்வையாளர்கள் வருகை தருவதாயின், மூன்று தினங்களுக்கு முன்பு அனுமதி பெறவேண்டுமென்றும் அறிவிப்பு விடுத்தார்.
இதனையடுத்து, பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் வ.சுரேந்திரன், சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து, 10 நிமிடங்களுக்குச் சபை ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள உறுப்பினர்களுடன் சபை அமர்வு மீண்டும் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago