எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஆரையம்பதி, பாலமுனை பிரதேசத்திலுள்ள முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் திட்டம், இன்று (18) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
குவைத் நாட்டின் நிதி அனுசரணையுடன், அந்நூர் சரிட்டி அமைப்பால் நிர்மானிக்கப்பட்ட இந்த குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில், அந்நூர் செரட்டி அமைப்பின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் எம்.நழீம் காத்தான்குடி பொறுப்பாளர் எம்.எம்.முஸ்தபா உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
பாலமுனை பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்துக்கு முன்பாக நிர்மானிக்கப்பட்ட குடிநீர் திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்நூர் சரிட்டி அமைப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள், மத வழிபாட்டுத் தளங்கள், பொது இடங்கள் என 100 இடங்களைத் தெரிவுசெய்து, அங்கு இந்தக் குடிநீர் திட்டங்களை அமைத்து வருகின்றது.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 500 வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago