2025 மே 09, வெள்ளிக்கிழமை

பிரசாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து, காத்தான்குடியில் முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், நேற்று முன்தினம் (07) இரவு நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.முஸ்தபா தலைமையில், அவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் உட்பட கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பிரசாரங்களை மேற் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X