Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் தான் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அதனடிப்படையில் சில பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தாகவும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் முக்கிய தேவைப்பாடுகள், பிரச்சினைகள் சம்பந்தமான வேண்டுகோள் கடிதத்தை, ஆளுநர் அலுலகத்தில் இன்று (02) நடைபெற்ற சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்தார்.
மட்டக்களப்பு மேற்கு வலயம் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை, ஆளுநர் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் அதனை முடிந்தளவு விரைவாகத் தீர்த்து வைப்பதற்கு உறுதியளித்தாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக தலையெடுத்துள்ளதாகவும் இதனால் இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்படுவதாகவும் ஆளுநரிடம், ஸ்ரீநேசன் எம்.பி விவரித்தார்.
அதேவேளை, கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழ் வரும் மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர், அதனோடு இணைந்த ஆளணியினரின் பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மேய்ச்சல் தரை இல்லாத குறைபாடு, காட்டு யானை வேலியின் தேவைப்பாடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதலின் அவசியம், பட்டதாரிகளிளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஸ்ரீநேசன் எம்.பி, ஆளுநரிடம் சுட்டிக்காட்டி, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளை முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago