Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரஜைகள் அனைவரும் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதன்மூலம் சமுதாய அமைதிப் பாதுகாக்கப்படுவதற்குப் பொலிஸார் எந்நேரமும் உறுதுணையாக இருக்கின்றார்கள் எனவும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுப் பொலிஸ் பரிசோதனை, வவுணதிவு பொலிஸ் வளாகத்தில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
அங்கு பொலிஸார் மத்தியில் உரையாற்றிய சமன் யட்டவர மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸ் - பொதுமக்கள் உறவு என்பது மிகவும் அந்யோந்யமானதாக இருக்க வேண்டும்.
24 மணிநேரமும் மக்களுக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார், சிறந்த முன்மாதிரிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதன் மூலம் சமூகத்தைச் சிறப்பாக வழி நடத்த முடியும்.
அதேவேளை, சிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களுக்கு, பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றார்.
இந்தப் பொலிஸ் பரிசோதனையின்போது, பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் என்பனவற்றின் தரம் மற்றும் பராமரிப்பு என்பன பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது சேம நலன்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025