Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன்,
எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம், காந்திப் பூங்கா முன்றலில், நேற்று மாலை (13) நடத்தினர்.
“இந்து விவகாரங்களுக்கு, முஸ்லிம் ஒருவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது, இந்து மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். இது, இந்து - இஸ்லாம் மதங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வழிவகுக்கும்.
“எனவே, இப்பிரதியமைச்சர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்து, தமிழர் ஒருவருக்கு வழங்கவும்” என, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.
இதேவேளை, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் என, இன்று (14) தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago