Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர், கோப்புகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரை, தேசிய ஊடகமொன்றில் விவாதத்துக்கு அழைக்க விரும்புகின்றேன். முடியுமாக இருந்தால், அங்கு வந்து கோப்புகளைக் காட்டட்டும்” என்று, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சவால் விடுத்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 206சி கிராமத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் புதன்கிழமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு சவால் விடுத்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
“கல்குடாத் தொகுதியில் 2019ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீதிகளும் புனரமைத்து வடிகாண்கள் அமைத்து முற்றாக வேலைகளை முடித்து விடுவோம். இந்தப் பிரதேச பாடசாலைக்கு வந்த தளபாடங்கள், வேறு பிரதேசத்துக்குச் சென்றது உங்களுக்குத் தெரியும்.
“இந்தப் பிரதேசத்தில் அரசியல் தலைமை இருந்த படியால் பல வேலைத்திட்டங்கள் தினமும் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு இல்லையெனில், வருடத்துக்கு ஒரு தடவை தான் அபிவிருத்தி மழை வந்து போகும்.
“இப்பிரதேசத்துக்குத் தேசிய பட்டியல் தருவதாகவும், பாடசாலைகளுக்குக் கட்டடம் தருவதாகவும், பல அபிவிருத்திகளை செய்வதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் செல்வார்கள். ஆனால், அதன் பிறகு அடுத்த தேர்தல் வரம்போகும் சிறிது காலங்களில் தான் பார்க்க முடியும். நாங்கள் அவ்வாறு அல்ல. உங்களின் அபிவிருத்திக்காகவும், உரிமைக்காகவும் என்றும் உங்களுடன் இருப்பவர்கள்.
“கல்குடா பிரதேசத்தில் ஒருசில குறுநில மன்னர்கள் இருக்கின்றார்கள் அவர்கள்தான், அவர்களது இலாபத்துக்காகத் தேர்தல் காலங்களில் வரும் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குபவர்களாகவும், அவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து பிரசாரம் செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
“அவ்வாறானவர்களுக்கு பிரதேசத்தில் அபிவிருத்தி நடந்தாலும் ஒன்று நடக்காவிட்டாலும் ஒன்றுதான். அவர்களது பக்கெட் நிரம்பினால் போதுமானதாக உள்ளனர்.
“அரசியலிலே கருத்து வேறுபாடுகள் அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும். தேர்தல் வருகின்ற பொழுது கருத்து முரண்பாடுகளை பேசிக் கொள்கின்றோம். தேர்தல் இல்லாத காலத்தில் சமூகத்துக்கு நல்ல தலைமைத்துவத்தைச் செய்கின்ற பண்பை கொண்டிருக்க வேண்டியவர்கள்.
நாங்கள் ஆரம்பித்து வைத்த வேலைகளை திறந்து வைத்த நிகழ்வுகள், இங்கு ஏராளமாக இருக்கின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago