2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பொறுப்புக் கூறும் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

பொறுப்புக் கூறக்கூடிய மற்றும் தீர்மானங்களை எடுக்கும்  அரசாங்க அதிகாரிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும் என, கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்குப் பிரதேசத்துக்கான  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில்  செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றபோதே, அவர்  இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,'பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை, அக்கூட்டங்கள் நடைபெறும் வேளைகளிலேயே தீர்த்து வைக்கப்பட வேண்டும். அப்பிரச்சினைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கக்கூடாது.

'இந்நிலையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைத்துத் திணைக்களங்களினதும் பொறுப்புக் கூறக்கூடிய அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். இந்த அதிகாரிகள் பங்கேற்றாலே, அக்கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றவும் முடியும். பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும்' என்றார்.  

'சில திணைக்களங்களிலிருந்து பொறுப்புக் கூறக்கூடிய அதிகாரிகளுக்குப் பதிலாக ஏனைய அதிகாரிகள்  அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களால் உரிய பதில் வழங்க முடியாமையால், தீர்மானங்களை எடுக்கவோ, நிறைவேற்றவோ முடியாத நிலைமை உள்ளது.

'இங்கு தெரிவிக்கப்படும்; விடயங்களை அவர்களுக்கு இவர்களால் தெரியப்படுத்த முடியுமே தவிர, பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண முடியாது தடுமாறும் நிலைமையே காணப்படுகின்றது' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X