Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடந்தோறும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்டு வரும் பிரதேச கலாசார விழா, நாளை (20) நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவையின் தலைவருமான எஸ்.எம்.அல் அமீன் தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு, ஏறாவூர் அறபா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகி, மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
மாவட்டச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் பிரதேச கலைஞர் கௌரவம், வாழ்நாள் சாதனையாளர் விருது, பரிசளிப்பு போன்ற பல நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
46 minute ago