2025 மே 08, வியாழக்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் பதவி பறிபோனது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச சபை (கோறளைப்பற்று வடக்கு) உறுப்பினரான பாலசிங்கம் முரளீதரன் என்பவர் பதவி நீக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த  பாலசிங்கம் முரளீதரனின் கட்சி உறுப்ரிமை நீக்கியுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, 2019ஆம்ஆண்டு டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட 2155/9ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை, முரளீதரனின் பதவி வறிதாக்கப்பட்ட அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து முரளீதரன் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கம் கடந்த டிசெம்பெர் முதல் வாரத்தில் அறிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X